இந்தியா
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 796 ஆக குறைந்தது

Published On 2022-04-12 04:27 GMT   |   Update On 2022-04-12 04:27 GMT
கொரோனா தொற்று பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 18 பேரும், மிசோரத்தில் ஒருவரும் என மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தினசரி நேற்று 861 ஆக இருந்தது. இந்நிலையில் புதிய பாதிப்பு 7.5 சதவீதம் குறைந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 796 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

நாட்டில் நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 196, மிசோரத்தில் 149, டெல்லியில் 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியே 30 லட்சத்து 36 ஆயிரத்து 928 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 18 பேரும், மிசோரத்தில் ஒருவரும் என மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் தொற்று பாதிப்பால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,21,710 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 946 பேர் நேற்று முழுமையாக மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 4 ஆயிரத்து 329 ஆக உயர்ந்தது. தற்போது 10,889 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்று முன்தினத்தைவிட 169 குறைவாகும்.

நாடு முழுவதும் நேற்று 15,65,507 டோஸ்களும், இதுவரை 185 கோடியே 90 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று 4,06,251 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 79.45 கோடியாக உயர்ந்தது.


Similar News