இந்தியா
மேற்கு வங்காளத்தில் 3 நாட்கள் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம்
- மேற்கு வங்காளத்துக்கு அடுத்த மாதம் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
- மார்ச் 1-ந்தேதி அரம்பக் மற்றும் கிருஷ்ணா நகரில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று பல ஆயிரம் கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில் மேற்கு வங்காளத்துக்கும் அடுத்த மாதம் (மார்ச்) செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அங்கு 3 நாட்கள் சூறாவளி பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மார்ச் 1-ந்தேதி அரம்பக் மற்றும் கிருஷ்ணா நகரில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். மீண்டும் மார்ச் 6-ந்தேதி செல்லும் அவர் பா.ஜ.க. மகளிர் அணியினர் நடத்தும் பிரமாண்டமான ஊர்வலத்தில் பங்கேற்கிறார். மார்ச் 7-ந்தேதியும் மேற்கு வங்காளத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.