இந்தியா

கடன் தொல்லை.. மனைவி, மகனை கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவன்

Published On 2025-01-19 08:18 IST   |   Update On 2025-01-19 08:18:00 IST
  • உறவினர் ஒருவருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார்.
  • 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடன் கொடுத்தவர்களின் தொல்லையால் மனைவி மற்றும் மகனை கொன்று 45 வயதான நபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைபவ் ஹாண்டே என்பவர் சில பேரிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கி இருந்ததாகவும், வட்டிக்கு அசல் தொகையையும் சேர்த்து கூடுதலாக ரூ.9 லட்சத்தையும் கொடுத்துள்ளார். இருப்பினும் அவர்கள் பணம் செலுத்துமாறு வைபவ்க்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் செய்வதறியாது தவித்த வைபவ், மனைவி மற்றும் மகனுக்கு அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைக்கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக உறவினர் ஒருவருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து வைபவ் வீட்டிற்கு வந்த உறவினர் கதவை நீண்ட நேரம் தட்டினார். எந்தவித பதிலும் இல்லாததால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வைபவின் மனைவி சுபாங்கி ஹாண்டே (36) மற்றும் அவர்களது 9 வயது மகன் தன்ராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வைபவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின் வைபவ் அளித்த வாக்குமூலத்தின் படி, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News