இந்தியா
VIDEO: 7 நிமிடம் தாமதமாக வந்த கால் டாக்சி.. டிரைவர் மீது எச்சில் துப்பி கோபத்தை தணித்த பெண்
- தனது பொறுமையை இழந்துவிடாத ஓட்டுநர் அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளார்
- குறைகளை நிறுவனத்திடம் கூறுங்கள் என்று ஓட்டுநர் அந்த பெண்ணின் கோபத்தை தணிக்க முயன்றார்.
7 நிமிடம் தாமதாக வந்ததற்காக கால் டாக்சி ஓட்டுனரை பெண் மோசமாக நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓட்டுனருடன் வாக்குவாதம் செய்து திட்டிய அந்த பெண் ஒரு கட்டத்தில் அவர் மீது எச்சில் துப்பியுள்ளார்.
ஆனால் தனது பொறுமையை இழந்துவிடாத ஓட்டுநர் அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். உங்கள் குறைகளை டாக்சி நிறுவனத்திடம் கூறுங்கள் என்று ஓட்டுநர் அந்த பெண்ணின் கோபத்தை தணிக்க முயன்றார்.
ஆனால் பெண் அடாவடித்தனமாக நடந்துகொண்டதால் டாக்சியை விட்டுவிட்டு வேறு வழிகளில் பயணத்தைத் தொடருமாறு அந்த ஓட்டுநர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை அந்த ஓட்டுநர் வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் அவர்களின் உரையாடல் பதிவாகி உள்ள நிலையில் இணையத்தில் பலர் அந்த பெண்ணின் செய்கையை கண்டித்து வருகின்றனர். இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.