FACT CHECK: வங்கிக் காசோலைகளில் கருப்பு நிற மையால் கையெழுத்திட RBI தடை?.. எதை பயன்படுத்தலாம்?
- அச்சிடப்பட்ட எழுத்துக்களிலிருந்து கையால் எழுதப்பட்ட எழுத்துக்களை வேறுபடுத்த உதவுகின்றன.
- அவற்றால் எழுதப்பட்டவை திருத்தங்கள் என்று தவறாகக் கருதப்படலாம்
வங்கியில் காசோலைகளை எழுதுவதற்கு கருப்பு மையை பயன்படுத்துவதை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கட்டாயப்படுத்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது.
காசோலை எழுதுவதற்கு குறிப்பிட்ட மை நிறங்கள் தேவை என்று ஆர்பிஐ எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் உண்மைச் சரிபார்ப்பு பிரிவு (PIB Fact Check) தெளிவுபடுத்தி உள்ளது.
பொதுவான வங்கி நடைமுறைகளில், நீலம் அல்லது கருப்பு மை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
ஏனெனில் இந்த வண்ணங்கள் தெளிவாக தெரியவும், காசோலையில் அச்சிடப்பட்ட எழுத்துக்களிலிருந்து கையால் எழுதப்பட்ட எழுத்துக்களை வேறுபடுத்தவும் உதவுகின்றன.
நீல நிற மை பெரும்பாலும் விரும்பப்படுகிறது, ஏனெனில் இது மிகவும் தனித்து நிற்கிறது, வங்கிகள் கையால் எழுதப்பட்ட விவரங்களை எளிதாகக் வேறுபடுத்தும். கருப்பு மை அதன் தோற்றம் மற்றும் வாசிக்க எளிமையாக இருப்பதன் காரணமாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ஆனால் சிவப்பு மையை படுத்துவதைத் தவிர்க்கவும். இது பொதுவாக முறையற்றதாக கருதப்படுகிறது. சிவப்பு மையால் எழுதப்பட்டவை திருத்தங்கள் என்று தவறாகக் கருதப்படலாம். இதேபோல், பென்சில் அல்லது அழிக்கக்கூடிய மை தவரிக்கப்டுகிறது.
ஏனெனில் அது எளிதாக மாற்றப்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு அபாயங்கள் உள்ளன. பச்சை அல்லது ஊதா போன்ற பிற நிறங்கள் வங்கி ஸ்கேனிங் அமைப்புகளுடன் பொருந்தாமல் இருப்பதால் சிக்கல்களுக்கு வழிவகுக்கும், எனவே அதையும் தவிர்ப்பது நல்லது.