இந்தியா

வறுக்கப்பட்ட பந்தய சேவலை ஏலத்தில் எடுத்த காட்சி


கோழி சண்டையில் தோற்றுப்போன சேவலின் கறி ரூ.1 லட்சத்துக்கு ஏலம்- உரிமையாளரின் கோபம் லாபமானது

Published On 2025-01-18 17:19 IST   |   Update On 2025-01-18 17:27:00 IST
  • சண்டை சேவல்கள் மீது பந்தயமாக கோடிக்கணக்கில் பணத்தை கட்டினர்.
  • ராஜேந்திரன் என்பவரது சேவல் பந்தயத்தில் பங்கேற்று தோற்றுப் போனது.

திருப்பதி:

ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையையொட்டி பாரம்பரிய சேவல் சண்டை பந்தயம் கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில் சண்டை சேவல்கள் மீது பந்தயமாக கோடிக்கணக்கில் பணத்தை கட்டினர்.

சேவல் பந்தயத்தில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் கைமாறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், என்.ஆர். பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது சேவல் பந்தயத்தில் பங்கேற்று தோற்றுப் போனது.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் அதை கொன்று ஏலம் விட முடிவு செய்தார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். இதனைக் கண்ட ஏராளமானோர் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

சேவலை கொன்று சுத்தம் செய்து முழு சேவலாக எண்ணையில் வறுத்தார். பின்னர் வறுக்கப்பட்ட சேவல் ஏலம் விடப்பட்டது. பலரும் போட்டி போட்டு சேவல் கறியை ஏலம் கேட்டனர். இதில் ஜாலி புடியை சேர்ந்த மாகந்தி நவீன் சந்திரபோஸ் என்பவர் ரூ.1, 11.111 ரூபாய்க்கு வறுக்கப்பட்ட சேவலை ஏலத்தில் எடுத்தார்.

இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். பந்தயத்தில் தோற்ற சேவலை வறுத்து ஏலம் விட்டதில் அதிக லாபம் கிடைத்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்தார். உரிமையாளர் கோபம் அவருக்கு லாபத்தை கொடுத்தது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News