இந்தியா

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு- சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு

Published On 2025-01-18 14:41 IST   |   Update On 2025-01-18 14:53:00 IST
  • இவ்வழக்கு, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • தண்டனை விவரம் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்வழக்கு, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள சியால்டா கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணை அனைத்தும் கடந்த 9-ந்தேதி நிறைவடைந்தது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு கூறப்பட்டது. தண்டனை விவரம் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News