இந்தியா
ஓடும் பைக்கில் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்த இளம்ஜோடி
- வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்தனர்.
- வாலிபர் காதலியை பைக்கில் அமர வைத்தவாறே ஓட்டி செல்கிறார்.
'ரீல்ஸ்' மோகத்தால் இளைஞர்களும், இளம்பெண்களும் செய்யும் சில செயல்கள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் கான்பூர் நகரை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று பைக்கில் செல்லும் போது ரீல்ஸ் வீடியோ எடுத்த காட்சிகள் இணையத்தில் பரவின. அதில், வாலிபர் தனது காதலியை பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் உள்ளது.
மேலும் அந்த வாலிபர் காதலியை பைக்கில் அமர வைத்தவாறே ஓட்டி செல்கிறார். இருவரும் ஹெல்மெட்டும் அணியவில்லை. மாறாக ஒரு பாடலுக்கு 'ரீல்ஸ்' செய்வதை பார்த்து பலரும் அவர்களை கண்டிப்பது போன்று காட்சிகள் உள்ளது.
இந்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்தனர். அவர் ஏற்கனவே பலமுறை சாலை விதிமீறலில் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்த போலீசார் அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.