இந்தியா

உ.பி.யில் என்கவுண்டரில் 3 காலிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2024-12-23 09:16 GMT   |   Update On 2024-12-23 09:16 GMT
  • காலிஸ்தான் பயங்கரவாதிகளும் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் கமாண்டர் படை அமைப்பை சேர்ந்தவர்கள்.
  • கொல்லப்பட்டவர்களிடம் இருந்து ஏகே 47 உள்ளிட்ட துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் இன்று அதிகாலை போலீசாரின் என்கவுண்டரில் 3 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட குர்விந்தர் சிங் (25), வீரேந்திர சிங் (எ) ரவி (23) மற்றும் ஜஸ்பிரீத் சிங் (எ) பிரதாப் சிங் (18) ஆகிய 3 காலிஸ்தான் பயங்கரவாதிகளும் தடை செய்யப்பட்ட இயக்கமான காலிஸ்தான் கமாண்டர் படை அமைப்பை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களிடம் இருந்து ஏகே 47 உள்ளிட்ட துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதிகள் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தின் மீது கையெறி குண்டுகளை வீசியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் பதுங்கியுள்ளதாக பஞ்சாப் போலீசாருக்கு கிடைத்த தகவலை உ.பி. போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உ.பி. போலீசார் நடத்திய ரகசிய ஆபரேஷனில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Tags:    

Similar News