இந்தியா
கார் வருவது தெரியாமல் ஓடிவந்த 5 வயது சிறுவன் பரிதாப மரணம்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி
- ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- ஓட்டுநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். .
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கார் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் ஹோட்டல் எக்ஸ்பிரஸ் இன்னில் நடந்தது. உயிரிழந்த குழந்தையின் பெயர் துருவ் ராஜ்புத் என தெரியவந்துள்ளது.
துருவ் தனது அப்பாவுடன் ஹோட்டல் பார்க்கில் விளையாடிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்துக்குப் பிறகு, துருவ் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
இந்த விபத்து தொடர்பாக ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.