குஜராத்தில் கட்டுமான பணியில் சுவர் இடிந்து 6 தொழிலாளர்கள் பலி.. பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
- நிலத்துக்கு அடியில் தொட்டி அமைக்க தொழிலாளர்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் கட்டுமானப்பணியின்போது சுவர் இடித்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜசல்பூர் பகுதியில் காடி என்று இடத்தில் தனியார் தொழிற்சாலையின் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது.
நிலத்துக்கு அடியில் தொட்டி அமைக்க தொழிலாளர்கள் சிலர் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் மண்சுவர் இடிந்து விழுந்ததில் பணியில் இருந்த தொழிலாளர்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர். இன்று மதியம் மதியம் 1.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 10 தொழிலாளர்களில் 6 பேர் உயிரிழந்தனர்.
மற்றவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது.