இந்தியா

76வது குடியரசு தினம் - பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து

Published On 2025-01-26 08:17 IST   |   Update On 2025-01-26 08:17:00 IST
  • குடியரசு தினத்தை ஒட்டி நாடு முழுக்க பலத்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  • தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றுகிறார்.

நம் நாட்டின் 76-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். அந்தந்த மாநிலங்களில் கவர்னர்கள் தேசிய கொடியை ஏற்றினர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது குடியரசு தின வாழ்த்து செய்தியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "குடியரசு தின வாழ்த்துக்கள்.

இன்று, நாம் ஒரு குடியரசு நாடாக 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடுகிறோம். நமது அரசியலமைப்பை உருவாக்கி, நமது பயணம் ஜனநாயகம், கண்ணியம் மற்றும் ஒற்றுமையில் வேரூன்றியுள்ளது என்பதை உறுதி செய்துள்ள அனைத்து பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தலைவணங்குகிறோம். இந்த சந்தர்ப்பம் நமது அரசியலமைப்பின் இலட்சியங்களைப் பாதுகாப்பதற்கும், வலுவான மற்றும் வளமான இந்தியாவை நோக்கி உழைப்பதற்கும் நமது முயற்சிகளை வலுப்படுத்தட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News