இந்தியா

நாசிக்கில் சோகம்: இரும்புக்கம்பி ஏற்றிச்சென்ற லாரி மீது டெம்போ மோதிய விபத்தில் 8 பேர் பலி

Published On 2025-01-13 05:09 IST   |   Update On 2025-01-13 05:09:00 IST
  • இரும்புக்கம்பி ஏற்றிச்சென்ற லாரி மீது டெம்போ மோதியது.
  • இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் வர்கா நகரில் நேற்று இரும்புக்கம்பி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதேபோல், நிப்ஹட் நகரில் இருந்து 16 பேருடன் சிட்கோ தொழிற்பேட்டைக்கு டெம்போ ஒன்றும் சென்றுகொண்டிருந்தது.

வர்கா நகர் அருகே அய்யப்பன் கோவில் சாலையில் சென்றுகொண்டிருந்த டெம்போ எதிரே இரும்புக்கம்பி ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த கோர விபத்தில் டெம்போவில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் அங்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் 8 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News