இந்தியா
மகர சங்கராந்தி, பொங்கல் பண்டிகை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
- ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- அதில், பண்டிகைகள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழுமையை கொண்டு வரட்டும் என்றார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. குடிமக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டில் உள்ள அனைவருக்கும் மனமார்ந்த பொங்கல் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துகள். பண்டிகைகள் நமது கலாசார, பாரம்பரிய அடையாளங்களைக் காட்டுகின்றன. பயிர்களுடன் தொடர்புடைய விழாக்கள் என்பதால் விவசாயிகளுக்கு நன்றி. பண்டிகைகள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழுமையை கொண்டு வரட்டும் என தெரிவித்துள்ளார்.