இந்தியா
ஐதராபாத்தில் திடீரென வெடித்த குப்பைத் தொட்டி.. தூக்கி வீசப்பட்டு தூய்மைப் பணியாளர் பலி - பகீர் வீடியோ

ஐதராபாத்தில் திடீரென வெடித்த குப்பைத் தொட்டி.. தூக்கி வீசப்பட்டு தூய்மைப் பணியாளர் பலி - பகீர் வீடியோ

Published On 2025-03-23 16:00 IST   |   Update On 2025-03-23 16:00:00 IST
  • சாலையோர மின்கம்பம் அருகே குப்பைகளை சேகரித்துகொண்டிருந்தார்.
  • வெடிப்பின் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருந்ததால் அவர் பல அடி தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள குசாய்குடாவில் நேற்று (சனிக்கிழமை) மாலை மர்ம பொருள் வெடித்ததில் 37 வயது துப்புரவு பணியாளர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

துப்புரவு பணியாளர் எஸ். நாகராஜு, நேற்று மாலை அப்பகுதியில் சாலையோர மின்கம்பம் அருகே இருந்த குப்பைத் தொட்டியில் குப்பைகளை சேகரித்துகொண்டிருந்தபோது காலாவதியான பெயிண்ட் டப்பா வெடித்ததாக கூறப்படுகிறது. அடையாளம் கண்டறியப்படாத ரசாயனங்கள் அதில் இருந்ததாக தெரிகிறது.

வெடிப்பின் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருந்ததால் அவர் பல அடி தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டார். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த வெடிவிபத்து சம்பவம் அருகில் உள்ள கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News