திருப்பதி கோவிலில் 2 நாட்கள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து
- 25-ந்தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
- திருப்பதி கோவிலில் நேற்று 75 ஆயிரத்து 428 பேர் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 25 மற்றும் 30-ந் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
25-ந்தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. 30-ந்தேதி உகாதி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மற்றும் 29-ந்தேதிகளில் எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.
தெலுங்கானா மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பரிந்துரை கடிதங்கள் இந்த மாதம் 23-ந்தேதி பெறப்பட்டு 24-ந் தேதி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 75 ஆயிரத்து 428 பேர் சாமி தரிசனம் செய்தனர். 31 ஆயிரத்து 920 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.