இந்தியா

திறந்த 2 நாட்களில் அம்பேத்கர் சிலை மாயம்

Published On 2025-03-14 07:40 IST   |   Update On 2025-03-14 07:40:00 IST
  • 1½ அடி உயரம் உடைய இந்த கற்சிலையை உத்தரபிரதேசத்தில் இருந்து அந்த கிராமத்தினர் வாங்கியிருந்தனர்.
  • போலீசார் திருட்டு வழக்குப் பதிவு செய்து, மாயமான சிலையையும், அதை திருடிச்சென்றவர்களையும் தேடி வருகின்றனர்.

சத்தார்பூர்:

மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பாரி கிராமத்தில் கடந்த 11-ந்தேதி அம்பேத்கர் சிலை ஒன்று திறக்கப்பட்டது. 1½ அடி உயரம் உடைய இந்த கற்சிலையை உத்தரபிரதேசத்தில் இருந்து அந்த கிராமத்தினர் வாங்கியிருந்தனர்.

இந்த சிலையை நேற்று காலையில் காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் அதை பெயர்த்து எடுத்து சென்றிருந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கே குவிந்தனர். பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் திருட்டு வழக்குப் பதிவு செய்து, மாயமான சிலையையும், அதை திருடிச்சென்றவர்களையும் தேடி வருகின்றனர்.

திறக்கப்பட்ட 2 நாட்களில் அம்பேத்கர் சிலை மாயமாகி இருந்த தகவல் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News