இந்தியா

ஹலால் Vs மல்ஹர்: இந்துக்களின் இறைச்சி கடைகளுக்கு புதிய சான்றிதழை அறிமுகம் செய்த பாஜக அரசு

Published On 2025-03-13 14:34 IST   |   Update On 2025-03-13 14:34:00 IST
  • ஹலால் முறையில் செய்யப்படும் இறைச்சிகளை மட்டுமே முஸ்லிம் மக்கள் வாங்குவார்கள்.
  • மல்ஹர் சான்றிதழ் இல்லாத கடைகளில் ஆட்டிறைச்சி வாங்க வேண்டாம் எனவும் அமைச்சர் வேண்டுகோள்.

மகாராஷ்டிராவில் 100% இந்துக்களால் நடத்தப்படும் இறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' என்ற சான்றிதழ் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மீன்வளத்துறை அமைச்சர் நிதேஷ் ரானே இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தினார். இதற்காக malharcertification.com என்ற வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.

மல்ஹர் சான்றிதழ் இல்லாத கடைகளில் ஆட்டிறைச்சி வாங்க வேண்டாம் எனவும் அமைச்சர் நிதேஷ் ரானே இந்துக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

ஹலால் முறையில் செய்யப்படும் இறைச்சிகளை மட்டுமே முஸ்லிம் மக்கள் வாங்குவார்கள். இந்து மக்கள் ஹலால் மற்றும் ஹலால் இல்லாத கடைகளிலும் இறைச்சி வாங்குவார்கள். இந்நிலையில், ஹலால் இறைச்சி கடைகளுக்கு போட்டியாக இந்த புதிய நடைமுறையை பாஜக அரசு கொண்டு வந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

ரம்ஜான் வருவதை ஒட்டி இந்து - முஸ்லிம் ஒற்றுமையை குலைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை பாஜக அரசு முன்னெடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

Tags:    

Similar News