15-ந்தேதி இந்தி தேர்வு: ஹோலி பண்டிகையால் எழுத முடியாதவர்களுக்கு மறுவாய்ப்பு- சிபிஎஸ்இ
- மார்ச் 15-ந்தேதி இந்தி தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
- நாட்டின் பெரும்பாலான இடங்களில் 15-ந்தேதி ஹோலி பண்டிகை நடைபெறும் என்பதால் மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க முடிவு.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. 15-ந்தேதி இந்தி தேர்வு நடைபெறும் என ஏற்கனவே தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களில் வருகிற 14-ந்தேதி ஹோலி பண்டியை கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது அல்லது 14-ந்தேதி ஹோலி பண்டியை 15-ந்தேதி வரை நீடிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஹோலி பண்டிகையால் தேர்வு எழுத முடியாத மாணவ-மாணவிகளுக்கு மறுவாய்ப்பு வழக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வந்தது. இதனால் மறுவாய்ப்பு வழங்கப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ கொள்கையின்படி, தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக சிறப்புத் தேர்வு நடத்தப்படும்போது, ஹோலி பண்டிகையின்போது தேர்வை தவறவிடும் மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.