போர்பன் விஸ்கி பிரியர்களுக்கு குட் நியூஸ்...
- அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து விவாதித்தார்.
- போர்பன் என்பது சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை அமெரிக்க விஸ்கி ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பாரீசில் நடந்த சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். இச்சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக சென்றடைந்தார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து விவாதித்தார். அதனை தொடர்ந்து பரஸ்பர வரிவிதிப்பு முறை அறிமுகம் படுத்தப்பட்டது.
இந்தியா மீது பரஸ்பர வரிகளை விதிக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததன் எதிரொலியால், போர்பன் விஸ்கி மீதான வரியை 150%-லிருந்து 100%-ஆகக் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
அமெரிக்க 'போர்பன் விஸ்கி' தயாரிப்பு நிறுவனங்களான JIM BEAM, FOUR ROSES, MAKER'S MARK 2 இந்த வரி குறைப்புகள் பயனளிக்கும் என கூறப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் மற்ற அனைத்து மதுபானங்களும் தொடர்ந்து 100 சதவீத இறக்குமதி வரியை கொண்டு இருக்கும்.
போர்பன் விஸ்மி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால் மதுபான பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
போர்பன் என்பது சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை அமெரிக்க விஸ்கி ஆகும். இது அதன் லேசான இனிப்பு சுவைக்கு பெயர் பெற்றது.