பீகார் அரசுத் தேர்வு முறைகேடு: மாணவர்கள் போராட்டத்தில் தடியடி - பிரசாந்த் கிஷோர் மீது பாய்ந்த வழக்கு
- போராட்டத்தை ஒடுக்க போலீசார் தடியடி நடத்தியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அவர்களை கலைக்க முயன்றனர்.
- ஜே.பி.கோலம்பரில் நடந்த அணிவகுப்பில் அவர் கலந்துகொண்டார்
குரூப் ஏ மற்றும் பி பதவிகளில் ஆட்களை சேர்ப்பதற்கான பிபிஎஸ்சியின் [BPSC] ஒருங்கிணைந்த முதன்மை[Prelims] போட்டித் தேர்வு [BPSC] கடந்த டிசம்பர் 13 [வெள்ளிக்கிழமை] நடைபெற்றது. மாநிலத்தில் 945 மையங்களில் சுமார் 5 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
பல தேர்வு மையங்களில் வினாத்தாள் கசிவு, வினாத்தாள் கொடுப்பதில் தாமதம் குறித்து குற்றம்சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாட்னாவில் உள்ள தேர்வு மையத்திற்கு வெளியே மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது மாவட்ட மாஜிதிரெட் மாணவர் ஒருவரை சரமாரிய தாக்கிய வீடியோ வைரலாகியது. தேர்வர்கள் வினாத்தாள்களை கிழித்து, தேர்வு அறையில் இருந்து அமளியில் ஈடுபட்ட வீடியோவும் வெளியாகியது.
இந்நிலையில் முதன்மை தேர்வுகளை மீண்டும் நடத்தக்கோரி திரளான மாணவர்கள் தலைநகர் பாட்னாவில் நேற்று [ஞாயிற்றுக்கிழமை] போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் வியூக வகுப்பாளார் பிரசாத் கிஷோர் நடத்தும் ஜன் சுராஜ் கட்சியினருக்கும், போட்டித் தேர்வு பயிற்சி மையாதோரும் மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்க போலீசார் தடியடி நடத்தியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அவர்களை கலைக்க முயன்றனர்.
முதல்வர் நிதிஷ் குமாரின் இல்லத்திற்குச் செல்வதற்காக மாணவர்கள் காந்தி மைதானத்தில் திரண்டு ஜே.பி. கோலம்பர் நோக்கி நோக்கி பேரணி நடத்தினர் பிரசாந்த் கிஷோர் மாணவர்களுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்திருந்தார். ஜே.பி.கோலம்பரில் நடந்த அணிவகுப்பில் அவர் கலந்துகொண்டார்.
இதனால் பிரசாந்த் கிஷோர், அவரது ஜன் சூராஜ் கட்சியின் தலைவர்கள், சில பயிற்சி மைய உரிமையாளர்கள் மற்றும் 700 போராட்டக்காரர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் மக்களைக் கூட்டி, அவர்களைத் தூண்டிவிட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜன் சூராஜ் கட்சி, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், பாட்னாவின் காந்தி மைதானம் அருகே கூட்டத்தை வழிநடத்தியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இது வன்முறையாக மாறியது என்றும் காவல்துறை ஒலிபெருக்கிகளை உடைத்து காவல்துறை அதிகாரிகளுடன் மோதினர் என்றும் கூறப்பட்டுள்ளது. நிர்வாகம் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், அதை மீறி பொது ஒழுங்கை சீர்குலைத்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.