இந்தியா

அது எப்படி திமிங்கலம்.. ஆண் ஆசிரியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கிய பீகார் அரசுப் பள்ளி

Published On 2024-12-25 07:27 GMT   |   Update On 2024-12-25 07:28 GMT
  • கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பில் ஒரு வாரம் விடுமுறையில் இருந்துள்ளார்.
  • ஸ்கிரீன் ஷாட் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பீகாரில் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் மஹுவா பகுதியில் இயங்கும் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஜிதேந்திர குமார் சிங், குழைந்தை பெறும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பில் ஒரு வாரம் விடுமுறையில் இருந்துள்ளார்.

ஆன்லைனில் விடுப்புக்கு விண்ணப்பிக்கும் அரசு ஆசிரியர்களுக்காக அமைக்கப்பட்ட போர்ட்டலைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட விடுப்பு குறித்த ஸ்கிரீன் ஷாட் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

ஆனால், இது ஒரு தொழில்நுட்பப் பிழை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப பிழையானது சரி செய்யப்படும் என மஹுவா தொகுதி கல்வி அதிகாரி அர்ச்சனா குமாரி தெரிவித்துள்ளார்.

ஆண்கள் கூட தங்கள் பிறந்த குழந்தைகளைக் கவனிக்க 'பித்ரித்வா அவகாஷ்' (தந்தையர் விடுப்பு) பெறுகிறார்கள் என்றும் அதனோடு மகப்பேறு விடுப்பு குழம்பியுள்ளது என்று அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும் ஆண் ஒருவருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்ட ஸ்க்ரீன் சாட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News