இந்தியா

அம்பேத்கர், பகத் சிங் படங்கள் நீக்கப்பட்டதாக ஆம் ஆத்மி வதந்தியை பரப்பி வருகின்றது: டெல்லி பாஜக பதில்

Published On 2025-02-24 21:22 IST   |   Update On 2025-02-24 21:22:00 IST
  • முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர், பகத் சிங் படங்கள் நீக்கப்பட்டதாக அதிஷி குற்றச்சாட்டு.
  • சிஏஜி அறிக்கை ஊழலை வெளிப்படுத்தும் என்பதால் மக்களை திசைதிருப்பு முயற்சியாக வதந்தி பரப்புவதாக பாஜக குற்றச்சாட்டு.

டெல்லி தேர்தல் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து, பாஜக எம்.எல்.ஏ. ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அதன்பின் இன்று முதன்முறையாக சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்கியது.

அப்போது "முதல்வர் ரேகா குப்தா அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங் படங்கள் நீக்கப்பட்டுள்ளது. தலித் மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான கட்சி தலைமையில் சட்டமன்றம் செயல்படுவது துரதிருஷ்டவசமானது. படங்கள் நீக்கப்பட்டது தலித்திற்கு எதிரான நிலையை காட்டுகிறது" என அதிஷி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் படங்கள் நீக்கப்பட்டதாக கூறுவது வதந்தி. சிஏஜி அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கும்போது அதன் ஊழலை வெளிப்படுத்தும் என்பதால், அதில் இருந்து மக்களை திசை திருப்ப எதிர்க்கட்சி பரப்பப்படும் வதந்தி.

முதல்வர் அலுவலகத்தில் மகாத்மா காந்தி, அம்பேத்கர், பகத் சிங், ஜனாதிபதி, பிரதமர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மற்ற மந்திரிகள் அலுவலகத்திலும் இதுபோன்று வைக்கப்பட்டுள்ளன என பாஜக தெரிவித்துள்ளது.

டெல்லி மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா "அம்பேத்கர் மற்றும் பகத் சிங் படங்கள் நீக்கப்பட்டதாக ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் அதிஷி வதந்தை பரப்பி வருகின்றனர். இது அற்ப அரசியலை எடுத்துக்காட்டுகிறது" என்றார்.

Tags:    

Similar News