இந்தியா

வக்பு வாரியம் இருக்கும்போது, சனாதன தர்மம் பாதுகாப்பு போர்டு ஏன் இருக்கக் கூடாது?- பவன் கல்யாண்

Published On 2025-02-24 14:56 IST   |   Update On 2025-02-24 14:56:00 IST
  • ஆந்திர மாநில சட்டமன்றத்தில் பவன் கல்யாண் கட்சி 2-வது பெரிய கட்சியாக திகழ்கிறது.
  • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகிறது.

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி என்றால் கூச்சல் குழப்பம் என்றுதான் அர்த்தம். கூச்சல், குழப்பத்தை அவர்கள் ஏற்படுத்தவில்லை என்றால், அவர்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என அழைக்கப்படமாட்டார்கள்.

சட்டமன்றத்தில் ஜனசேனா கட்சியை 2-வது பெரிய கட்சியாகவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை 3-வது கட்சியாகவும் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதுதான் அவர்களுக்கு பிரச்சனை.

அவர்கள் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. 2019-ம் ஆண்டு ஆட்சி அமைத்திருந்ததால், அவர்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்று அர்த்தம் அல்ல.

பெற்ற வாக்குகள் அடிப்படையில் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் கோரிக்கை வைக்கிறார்கள். அப்படி கோரிக்கை வைப்பதாக இருந்தால், அவர்கள் ஜெர்மனிக்கு செல்ல வேண்டும். ஜெர்மனி ஜனநாயகம் வாக்கு சதவீதத்தின் அடிப்படையிலானது. கோரிக்கை வைக்கும் அவர்கள் ஜெர்மனிக்கு செல்ல வேண்டும். நமது நாட்டில் அவ்வாறு அனுமதிக்க முடியாது.

இந்தியாவில் வக்பு வாரியம் இருந்தால், சனாதன தர்மம் பாதுகாப்பு போர்டு ஏன் இருக்கக் கூடாது?

இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News