இந்தியா

வடமாநிலங்களில் தெரிந்த சூப்பர் ப்ளூ மூன்- ஆர்வமுடன் கண்டு ரசித்த மக்கள்

Published On 2023-08-31 01:43 IST   |   Update On 2023-08-31 01:43:00 IST
  • இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடித்தது.
  • பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, நிலா இயல்புநிலையை அடைந்தது.

சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த முழு சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. இது, இம்மாதத்தின் 2-வது பவுர்ணமி ஆகும். அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதனால், அது 'புளு மூன்' என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வாகும்.

நிலா தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோன்றுவது இதன் சிறப்பு. அதாவது, கீழ்வானத்தில் நிலா தோன்றும்போதே, மாலை 6.25 மணியளவில் முழு சந்திர கிரகணம் தொடங்கியது. இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடித்தது. அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, நிலா இயல்புநிலையை அடைந்தது.

150 ஆண்டுகளுக்கு பிறகு, ஏற்பட்ட இந்த அரிய நிகழ்வை அசாம் மற்றும் வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வானில் சூப்பர் ப்ளூ மூன் நன்றாக தெரிந்தது. மக்கள் ஆர்வத்துடன் நிலவை கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News