இந்தியா
கேரள பல்கலைக்கழக இளைஞர் விழாவில் லஞ்ச புகார்-இடைத்தரகர் உள்பட 3 பேர் கைது
- போட்டி முடிவுகளை வெளியிடுவதில் நடுவர்களாக இருந்த சிலர் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது.
- சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கண்டோன்மெண்ட போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் இளைஞர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அணி அணியாக கலந்து கொண்டனர். இதில் போட்டி முடிவுகளை வெளியிடுவதில் நடுவர்களாக இருந்த சிலர் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இதன் காரணமாக பல போட்டிகள் நிறுத்தப்பட்டன.
தொடர்ந்து நடுவர்களின் போன்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் நீதிபதி ஷாஜி என்பவரது போனுக்கு இடைத்தரகர்கள் தொடர்பு கொண்டிருப்பது தெரிவயவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கண்டோன் மெண்ட போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், லஞ்சம் புகாரை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து மார்க்கம்களி நீதிபதி ஷாஜி (வயது52), காசர்கோடு ஜோமெட் (33), மலப்புரம் சூரஜ் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.