இந்தியா
சட்டமன்ற தேர்தல்: டெல்லியில் பிப்ரவரி 5-ந்தேதி பொது விடுமுறை
- 1.75 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
- 44 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
டெல்லி மாநில தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆம் ஆத்மி, பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. காங்கிரசும் போட்டியில் உள்ளது.
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட இருக்கின்றனர். சுமார் 1.56 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்த நிலையில் வாக்காளர்கள் பெருமளில் திரண்டு வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குப்பதிவு நடைபெறும் பிப்ரவரி 5-ந்தேதி பொது விடுமுறை அறிவித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விடுமுறை அனைத்து அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களுக்கு அடங்கும்.
பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணப்படுகின்றன.