பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: மாயாவதி கண்டனம்
- ஆர்ம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் முன்பே படுகொலை செய்யப்பட்டது மிகமிக கண்டிக்கத்தக்கது.
- குற்றவாளிகளை ஆளும் அரசு தண்டிக்க வேண்டும்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இன்று தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதனையடுத்து வழியால் துடித்த ஆம்ஸ்ட்ராங்கை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனை செல்வதற்குற்கு முன்பாகவே உயிரிழந்தார்.
படுகொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் மாயாவதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில், "தமிழ்நாடு பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், அவரது வீட்டின் முன்பே படுகொலை செய்யப்பட்டது மிகமிக கண்டிக்கத்தக்கது. வழக்கறிஞரான அவர், தமிழ்நாட்டின் வலிமையான தலித் குரலாக அறியப்பட்டார். குற்றவாளிகளை ஆளும் அரசு தண்டிக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.