மகளிர் உதவித்தொகை- அதிஷி குற்றச்சாட்டுக்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா பதில்
- பிரதமர் மோடியின் கனவை நிறைவேற்றுவது தலைநகரில் உள்ள 48 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் பொறுப்பாகும்.
- பெண்களுக்கான நிதி உதவி உட்பட எங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.
டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அதிஷி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், டெல்லி பெண்களுக்கு, ரூ.2,500 வழங்கப்படும் திட்டத்தை, முதல் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றுவோம் என டெல்லி பெண்களுக்கு பா.ஜ.க. உறுதியளித்தது.
புதிய முதல்வர் ரேகா குப்தாவும், அவரது அமைச்சரவை அமைச்சர்களும் நேற்று பதவியேற்றனர். முதல் அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று பெண்கள் எதிர்பார்த்து இருந்தனர். டெல்லி மக்களை ஏமாற்ற பா.ஜ.க. முடிவு செய்துள்ளது என்று குற்றம்சாட்டி இருந்தார்.
இதுதொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா கூறுகையில்,
பிரதமர் மோடியின் கனவை நிறைவேற்றுவது தலைநகரில் உள்ள 48 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் பொறுப்பாகும்.
ஆம் ஆத்மி கட்சி தலைவரின் கருத்துக்கள் வந்தன. மேலும், தனது கட்சி மக்களுக்கு அளித்த ஒவ்வொரு உறுதிமொழியையும் புதிய அரசாங்கம் நிறைவேற்றும்.
பெண்களுக்கான நிதி உதவி உட்பட எங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வாக்குறுதி அளிக்கப்பட்டபடி பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 உதவித்தொகை மார்ச் 8 ஆம் தேதிக்குள் கிடைக்கும். 100 சதவீதம் பெண்கள் மார்ச் 8 ஆம் தேதிக்குள் அவர்களின் வங்கிக் கணக்குகளில் பண உதவியைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.