இந்தியா

வங்கி கணக்கில் ரூ. 2500 டெபாசிட் ஆன தகவலுக்காக காத்திருக்கும் டெல்லி பெண்கள்: அதிஷி

Published On 2025-03-08 16:50 IST   |   Update On 2025-03-08 16:50:00 IST
  • பிரதமர் மோடி அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.
  • இது வெறும் பொய் வாக்குறுதியாக மாறிவிடக் கூடாது.

டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி பாஜக ஆட்சி அமைத்ததும் மார்ச் 8-ந்தேதி பெண்கள் வங்கி கணக்கில் 2500 ரூபாய் வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அத்துடன் முதல் அமைச்சரவையில் இதற்கு ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் முதல் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்படவில்லை. மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படுவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை பாஜக அரசு முன்னெடுக்கவில்லை. இதனால் டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அதிஷி தொடர்ந்து பாஜக அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் மகளிர் தினமான இன்று டெல்லி பெண்கள் தங்களுடைய வங்கிக் கணக்கில் 2500 ரூபாய் செலுத்தப்பட்டதற்கான மெசேஜ் வருகிறதா? என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என அதிஷி கிண்டல் செய்துள்ளார்.

இது தொடர்பாக அதிஷி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

டெல்லியின் அனைத்து பெண்களும் இன்று அவர்களுடைய போன்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வங்கிக் கணக்கில் 2500 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதற்கான தகவலுக்காக காத்திருக்கிறார்கள்.

பிரதமர் மோடி அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகிறேன். இது வெறும் பொய் வாக்குறுதியாக மாறிவிடக் கூடாது.

இவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News