null
கோர்ட்டில் நடக்கும் விவாகரத்து வழக்கு.. தூக்கில் தொங்கிய தொழிலதிபர் - டெல்லியில் விபரீதம்
- மாலை 4.18 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாகக் கடந்த மாதம் பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த்தது. இந்நிலையில் டெல்லியிலும் அதுபோன்ற சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புனித் குரானா (40) என்ற டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் நேற்று கல்யாண் விஹாரில் மாடல் டவுன் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று [டிசம்பர் 31] மாலை 4.18 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புனித்தின் மனைவி மனிகா பஹ்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை மனரீதியாகச் சித்திரவதை செய்ததாகவும் இதுவே தற்கொலைக்குக் காரணம் என்றும் புனித் குடும்பம் குற்றம் சாட்டியுள்ளது.
இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருவரும் சேர்ந்து பேக்கரி ஒன்றை நடத்தி வந்த நிலையில் அதை நிர்வகிப்பது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் இருந்து வந்துள்ளது.
புனித்தின் சகோதரி செய்தியாளர்களிடம் பேசுகையில், மனிகா பஹ்வா, அவரது பெற்றோர் மற்றும் அவரது சகோதரி எனது சகோதரனை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கினர்.
உன்னால் ஒன்றும் செய்ய முடியாது, தைரியம் இருந்தால் தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டும் என்று கூறி தனது சகோதரன் புனித்தைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் தெரிவித்தார். இதற்கிடையே புனித்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.