பால்கனியில் இருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்த இந்திய ராணுவ கேப்டன்
- தரை தளத்தில் சுற்றிலும் ரத்த வெள்ளத்தில் ஷங்கர் கிடந்துள்ளார்.
- ஆனால் சிகிச்சை பலனின்றி மாலையில் அவர் உயிரிழந்தார்.
இந்திய ராணுவதின் மருதுவப் படை [AMC] -இல் கேப்டாக பணிபுரிந்து வந்தவர் ஷங்கர் ராஜ் குமார் [30 வயது]. புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி மதியம் 12.45 மணிக்கு அல்காபுரி காலனியில் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் உள்ள அவரது வீட்டு பால்கனியில் நின்றுகொண்டிருந்த ஷங்கர் பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார். சத்தம் கேட்டதும் அவரது மனைவியும் பணிப்பெண்ணும் ஓடி வந்து பார்த்தபோது, தரை தளத்தில் சுற்றிலும் ரத்த வெள்ளத்தில் ஷங்கர் கிடந்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஷங்கர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மாலையில் அவர் உயிரிழந்தார். ஷங்கர் வழுக்கி விழுந்திருக்கலாம் என்றும் அவரது மரணத்தில் வேறு சந்தேகம் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.