இந்தியா

ஓட்டு போட்டதால் நீங்கள் எனக்கு முதலாளி என அர்த்தமில்லை.. நான் என்ன கூலியா? - அஜித் பவார்

Published On 2025-01-06 12:58 IST   |   Update On 2025-01-06 12:58:00 IST
  • சிவசேனா பிரிவு ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் பிரிவு அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்கள் ஆகினர்.
  • எங்கள் நிலைப்பாட்டில் மறுபரிசீலனை எதுவும் இல்லை

மகாராஷ்டிராவில் கடந்த வருடம் நவம்பரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் பொறுப்பேற்க, சிவசேனா பிரிவு ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் பிரிவு அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்கள் ஆகினர்.

இந்நிலையில் சமீபத்தில் தான் வெற்றி பெற்ற பாராமதி தொகுதிக்கு விஜயம் செய்த துணை முதல்வர் அஜித் பாவார் சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார். வாக்காளர்கள் தன்னைத் தேர்ந்தெடுத்ததால் அவர்கள் தனக்கு 'முதலாளி' அல்ல என்று வாயை விட்டுள்ளார்.

பாராமதியில் கூட்டம் ஒன்றில் பேசிய அஜித் பவார், நீங்கள் எனக்கு வாக்களித்ததால், நீங்கள் எனக்கு முதலாளி அல்லது உரிமையாளராகிவிட்டீர்கள் என்று அர்த்தமல்ல. இப்போது என்னை விவசாயக் கூலி ஆக்கிவிட்டீர்களா? என்று மக்கள் கூட்டத்தை பார்த்து கறாராக கூறினார்.

முன்னதாக ஜனவரி 3 ஆம் தேதி, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி), சரத் பவார் அணியுடன் மீண்டும் இணையப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி [என்டிஏ] மற்றும் மஹாயுதியுடன் தொடர்வோம். எங்கள் நிலைப்பாட்டில் மறுபரிசீலனை எதுவும் இல்லை என்று மகாராஷ்டிர மாநில என்சிபி தலைவர் சுனில் தட்கரே தெரிவித்திருந்தார். இதற்கிடையே அஜித் பவாரின் ஆணவம் தொனிக்கும் பேச்சு வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News