இந்தியா

பிப்ரவரி 5-ந்தேதி டெல்லி சட்டமன்ற தேர்தல்: 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை

Published On 2025-01-07 14:51 IST   |   Update On 2025-01-07 14:56:00 IST
  • வருகிற 10-ந்தேதி மனுதாக்கல் தொடங்கும்.
  • வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் வருகிற 20-ந்தேதியாகும்.

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு மையங்கள் அமைக்கப்படும்.

* 85 வயதை கடந்த வாக்காளர்கள் வீட்டில் இருந்து வாக்களிக்க முடியும்.

* வருகிற 10-ந்தேதி மனுதாக்கல் தொடங்கும்.

* 17-ந்தேதி வேட்புனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

* வேட்புமனு மீதான பரிசீலனை 18-ந்தேதி நடைபறும்.

* வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 20-ந்தேதியாகும்.

* வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந்துதி நடைபெறும்.

முன்னதாக,

* இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் என்பதை விரைவில் எட்டுவோம்.

* வாக்களிப்பதிலும், பெண்களின் பங்கேற்பிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளோம்.

* நான் அறிவிக்கும் கடைசி தேர்தல் தேதி இதுவாகும்

* டெல்லியில் 83.5 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 71.7 பெண் வாக்காளரக்ள் உள்ளனர். மற்றவர்கள் 1261 பேர்

* குறிப்பிட்ட குழுக்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் தவறான சேர்த்தல்கள் அல்லது நீக்கங்கள் குறித்து வதந்திகள் பரப்பப்படுகின்றன.

* வாக்காளர் பட்டியல் முற்றிலும் வெளிப்படையானது. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் அல்லது சேர்த்தல் முறையாகப் பின்பற்றப்பட்டது. எந்தவிதமான மோசடிக்கும் இடமில்லை.

* ஜனநாயகத்தில் உள்ளார்ந்த கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. அனைத்து சந்தேகங்களையும் நீக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை.

* தேர்தல் நடத்தப்படுவதில் 70 நடைமுறைகள் உள்ளன.

* 2020 பீகார் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த தேர்தல்களில் 15 வெவ்வேறு கட்சிகள் தனிப்பெரும் கட்சிகளாக உருவெடுத்துள்ளன.

* படிவம் 7 இல்லாமல் வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப்படாது.

* வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் ஒவ்வொரு கட்டத்திலும் முழு வெளிப்பாடு மற்றும் ஆட்சேபனை தெரிவிக்க அரசியல் கட்டுகள் ஈடுபடுகின்றனர்.

* வாக்குப்பதிவு நாளுக்கு 7-8 நாட்களுக்கு முன்புதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன, வேட்பாளர்களுக்கு அவர்களின் முகவர்கள் மூலம் ஒவ்வொரு செயல்முறையின்போதும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்று நீதிமன்றங்கள் 42 சந்தர்ப்பங்களில் தீர்ப்பளித்துள்ளன, மோசடி குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை.

* வாக்காளர் வாக்குப்பதிவு தரவை மாற்றுவது சாத்தியமற்றது, மாலை 5 மணிக்குப் பிறகு வாக்குப்பதிவு அதிகரிப்பது குறித்து தவறான கருத்து பரப்பப்படுகிறது.

* தேர்தல் ஆணையத்தின் மதிப்பை குறைக்க நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

* வெளிப்படுத்தல் எங்கள் முக்கிய தூண், விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் தரவுத்தொகுப்புகள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கின்றன.

* வாக்கு இயந்திரம் குறித்து கேள்வி எழுப்புவது தேர்தலை தடம்புரள வைக்கும்.

* ஏராளமான தரவுகள் சரிபார்க்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News