இந்தியா

மத்திய மந்திரிக்கு திருநீறு பூசி, ஆசி வழங்கிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

Published On 2025-01-06 11:58 IST   |   Update On 2025-01-06 11:58:00 IST
  • அப்பா பைத்தியம் சாமி கோவிலில் அர்ஜூன்ராம் மேக்வால் சாமி தரிசனம்.
  • ரங்கசாமியுடன் மத்திய மந்திரி சிறிது நேரம் ஆலோசனை நடத்திவிட்டு புறப்பட்டார்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்க மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை மந்தரி அர்ஜூன்ராம் மேக்வால் புதுச்சேரிக்கு வந்தார்.

கவர்னர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்துவிட்டு, கோரிமேட்டில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு சென்றார்.

அங்குள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலில் இணை மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி தீபாராதனை காண்பித்து, மத்திய மந்திரிக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார். அதன்பின்பு, முதல்-அமைச்சர் வீட்டில் ரங்கசாமியுடன் மத்திய மந்திரி சிறிது நேரம் ஆலோசனை நடத்திவிட்டு புறப்பட்டு சென்றார். 

Tags:    

Similar News