ஜார்க்கண்ட் சட்டசபை முதற்கட்ட தேர்தல், வயநாடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு- லைவ் அப்டேட்ஸ்
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் 43 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல்.
- வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக இன்று 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
அதேபோல் வயநாடு மக்களவை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவுகள் தொடங்கின.
அதேபோல் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வாக்குப்பதிவும் தொடங்கியது.
விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். முதன்முறையாக அவர் அரசியலில் நேரடியாக களம் இறங்கியுள்ளார்.
வருகிற 23 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஜார்க்கண்ட் தேர்தலில் 3 மணி நிலவரப்படி 59.28 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் எச்சரிக்கையை கடந்தும் வாக்காளர்கள் அதிகளவில் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநில தேர்தலை ஒட்டி இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ள ஏற்பாடுகளால், மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வருவார்கள் என்று நான் நம்புகிறேன் - பா.ஜ.க. எம்.பி. பிரவீன் கந்தேல்வால்
வயநாடு இடைத்தேர்தலில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி 44.51 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.
ஜார்க்கண்ட்: ஹஜிரிபாக் வாக்கு மையத்தில் பா.ஜ.க. தலைவர் ஜெயந்த் சின்ஹா வாக்களித்தார்.
ஜார்க்கண்ட்: ஹஜிரிபாக் வாக்கு மையத்தில் பா.ஜ.க. தலைவர் ஜெயந்த் சின்ஹா வாக்களித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் தவுசா சட்டமன்ற தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. மணமகள் ஒருவர் தனது வாக்கை செலுத்திய காட்சி.
ஜார்க்கண்டில் நக்சல் மிரட்டல் விடுத்து போஸ்டர் ஒட்டியபோதிலும், மிரட்டலை புறக்கணித்து சோனாபி கிராம மக்கள் அதிக அளவில் திரண்டு வாக்களித்தனர். இந்த கிராமம் மேற்கு சிங்புமில் உள்ள ஜகன்னாத்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை முதற்கட்ட தேர்தல்: 11 மணி வரை 29.3 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.