இந்தியா

ராணுவ வீராங்கனைகள்,மந்திரி அஜய்பட்(கோப்பு படம்)

பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை- மத்திய அரசு தகவல்

Published On 2022-12-09 20:37 GMT   |   Update On 2022-12-09 20:37 GMT
  • ராணுவத்தில் பெண்களுக்கான பதவி எதுவும் காலியாக இல்லை.
  • கடற்படை மற்றும் விமானப்படையில் பாலின சமத்துவ அடிப்படையில் பணி நியமனம்

பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு பாதுகாப்புத்துறை இணை மந்திரி அஜய் பட் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முப்படைகளில் பெண்களை ஈடுபடுத்துவதில் சீரான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான பதவி எதுவும் காலியாக இல்லை. இந்தியக் கடற்படை மற்றும் இந்திய விமானப்படையில் அனுமதிக்கப்பட்ட பதவிகள் அனைத்தும் பாலின சமத்துவ அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News