இந்தியா

நாடு முழுவதும் 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்- பிரதமர் மோடி பேச்சு

Published On 2023-02-03 16:35 GMT   |   Update On 2023-02-03 16:35 GMT
  • மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் மூலம் பெண்கள் சேமிப்பின் மீதான அதிக வட்டியின் பலனைப் பெறுவார்கள்.
  • வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெண்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில், புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

கவுகாத்தி:

அசாம் மாநிலம் பார்பேடா மாவட்டத்தில் உலக அமைதிக்காக கிருஷ்ணகுரு ஏக்னம் அகண்ட கீர்த்தனை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டின் வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் பணிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2023-24 மத்திய பட்ஜெட்டில் பெண்களின் சேமிப்புக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்க, அவர்களுக்கு அதிகாரம் அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெண்களின் வருமானத்தை அதிகரித்து, அவர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில், மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள் சேமிப்பின் மீதான அதிக வட்டியின் பலனைப் பெறுவார்கள்.

அசாம், நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெண்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில், புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும். இதுபோன்ற பல அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் உள்ளன.

இந்த அரசு சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மேம்படுத்தப்பட்ட சுற்றுலா வசதிகள், நவீன உள்கட்டமைப்பு மற்றும் மெய்நிகர் இணைப்பு ஆகியவற்றிற்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News