இந்தியா
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Published On 2025-01-30 16:02 IST   |   Update On 2025-01-30 16:09:00 IST
  • கர்நாடக மாநில தேர்தலின்போது அவதூறாக பேசியதாக வழக்கு.
  • நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், நேரில் ஆஜராகி ஜாமின் பெற்றிருந்தார்.

கர்நாடக மாநில தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி அவதூறாக பேசியதாகவும், அவரது பேச்சு தனிப்பட்ட முறையில் தன்னை காயப்படுத்தியதாகவும், உத்தர பிரதேச மாநிலம் ஹனுமான்கஞ்ச் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. தலைவர் மிஸ்ரா என்பவர் நிதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜராக காரணத்தினால், நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. பின்னர் பிப்ரவரி 2024-ல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஜூலை 26-ந்தேதி வாக்குமூலம் அளித்தார். அதனைத் தொடர்ந்து 50 ரூபாய் உடன் இரண்டு பேர் உத்தரவாதத்துடன் ஜாமின் வழங்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், ராகுல் காந்தி சார்பில் ஆஜராகக்கூடிய வழக்கறிஞர் காசி பிரசாத் சுக்லா, தனக்கு உடல் நலம் சரியில்லை. இதனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என தெரிவித்து அதற்கான சான்றிதழும் வழங்கியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் 11-ந்தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிபதி வர்மா உத்தரவிட்டார். மிஸ்ரா சார்பில் வழக்கறிஞர் சந்தோஷ் குமார் பாண்டே ஆஜரானார்.

இது வழக்கு தனக்கு எதிரான அரசியல் சதி என ராகுல் காந்தி தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News