இந்தியா
கொரோனா புதிய பாதிப்பு 5,076 ஆக சரிவு
- கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 92 ஆயிரத்து 779 ஆக உயர்ந்தது.
- கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,970 பேர் மீண்டுள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 5,554 ஆக இருந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,076 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 92 ஆயிரத்து 779 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,970 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 19 ஆயிரத்து 264 ஆக உயர்ந்தது. தற்போது 47,945 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 905 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் மேலும் 11 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,150 ஆக உயர்ந்துள்ளது.