முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன், ஆந்திராவின் சதாம் உசேன் - அமைச்சர் நாரா லோகேஷ்
- 4 பேர் ஒரு வீட்டில் வசிக்க, 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
- பிரதமருக்கு கூட இவ்வளவு பெரிய வீடு இல்லை
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவின் சதாம் உசேன் என்று அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
ருஷிகொண்டா மலைகளில் உள்ள ஜெகன் மோகனின் ஆடம்பர மாளிகை குறித்து பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷ், "ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஆந்திராவின் 'சதாம் உசேன்' என்றும், 30 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பேன் என்றும் நினைத்தார்.
என் தாத்தா முதல்வராக இருந்தார், என் அப்பா முதல்வராக இருந்தார், ஆனால் இவ்வளவு பெரிய அறைகளை நான் பார்த்ததில்லை. அவரது சகோதரி மற்றும் தாயார் ஜெகன் மோகன் குடும்பத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 4 பேர் ஒரு வீட்டில் வசிக்க, 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. பிரதமருக்கு கூட இவ்வளவு பெரிய வீடு இல்லை
அரண்மனை போன்ற இந்த வீட்டை என்ன செய்வது என்பது குறித்து தெலுங்கு தேசம் அரசு முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்.
சதாம் உசேன் ஈராக்கின் அதிபராக இருந்தார், 1979 முதல் 2003 வரை அந்த நாட்டை ஆட்சி செய்தார். அவரது ஆட்சி நிர்வாகம் சர்வாதிகாரமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.