அவுரங்கசீப் விவகாரம்.. ஆக்கிரமிப்பாளர்களை புகழ்வது தேசத்துரோகம் - யோகி ஆதித்யநாத்
- அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற இந்துத்துவ அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன
- நாக்பூரில் கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.
மகாராஷ்டிரத்தின் அவுரங்கபாத் நகரில் அவுரங்கசீப் கல்லறை உள்ளது. அந்தக் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற இந்துத்துவ அமைப்புகளின் போராட்டம் நாக்பூரில் வன்முறையாக மாறியது. கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், "ஆக்கிரமிப்பாளர்களை (அவுரங்கசீப்) புகழ்வது தேசத்துரோகமாகும். நமது முன்னோர்களை அவமதித்தவர்களை, நமது பெண்களை துன்புறுத்தியவர்களை, நமது நம்பிக்கையை பழித்தவர்களை புகழ்வதை புதிய இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது
ஒவ்வொரு இந்திய குடிமகனும் நமது அடையாளத்தை அழிக்க முயன்றவர்களை பாராட்டுவதை விட, நமது புகழ்பெற்ற தலைவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக சிவாஜி மகாராஜின் சிலையை திறந்து வைக்கும் விழாவில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, அவுரங்கசீப் மகாராஷ்டிராவைக் கைப்பற்ற வந்தார், ஆனால் அவர் சிவாஜி மகாராஜின் தெய்வீக சக்தியை எதிர்கொண்டார். இன்னும் அவரை (அவுரங்கசீப்பை) புகழ்ந்து பாடுபவர்கள் துரோகிகளைத் தவிர வேறில்லை என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.