இந்தியா

சென்னை-தூத்துக்குடி ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

Published On 2024-12-05 23:52 GMT   |   Update On 2024-12-05 23:52 GMT
  • ரெயில்வே சட்டத் திருத்த மசோதா 2024-ன் மீது நடந்த விவாதத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசினார்.
  • அப்போது, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயில் சேவையை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.

சென்னை:

பாராளுமன்றத்தின் மக்களவையில் நேற்று ரெயில்வே சட்டத் திருத்த மசோதா 2024 மீது விவாதம் நடைபெற்றது. இதில் தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி, சென்னை மற்றும் தூத்துக்குடி இடையே கூடுதல் ரெயில்களை இயக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ரெயில்வே சட்டத் திருத்த மசோதா 2024-ன் மீது நடைபெற்ற விவாதத்தில் தெற்கு ரெயில்வே ரெயில்கள் பலவற்றில் அடிப்படை வசதிகள் இல்லாததையும், ரெயில்வே துறையைத் தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தும் பேசினேன். தமிழ்நாட்டில் சென்னை - தூத்துக்குடி இடையே ரெயில் சேவையை அதிகப்படுத்தவும் மத்திய அரசிடம் வலியுறுத்தினேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News