இந்தியா

சோனு சூட்டுக்கு கைது வாரண்ட் பிறப்பித்த லூதியானா கோர்ட்

Published On 2025-02-07 05:48 IST   |   Update On 2025-02-07 05:48:00 IST
  • வழக்கில் சாட்சியம் அளிக்க சோனுவை கோர்ட்டுக்கு வரவழைக்க சம்மன் அனுப்பினர்.
  • அவர் சாட்சியம் அளிக்க கோர்ட்டில் ஆஜராகாததால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

லூதியானா:

பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக லூதியானா ஐகோர்ட் நீதிபதி ராமன்பிரீத் கவுர் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளார்.

லூதியானாவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ் கன்னா. இவர் மோகித் சுக்லா என்பவர்மீது 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளித்தார். அதில், அவர் போலி ரிஜிகா நாணயத்தில் முதலீடு செய்ய வற்புறுத்தப்பட்டதாகக் கூறியிருந்தார்.

இதுதொடர்பான வழக்கு லூதியானா கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க சோனு சூட்டுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இந்நிலையில், சாட்சியம் அளிக்க கோர்ட்டில் ஆஜராகாத நிலையில், சோனு சூட்டுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

சோனு சூட்டுக்கு முறைப்படி சம்மன் அல்லது வாரண்ட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கலந்துகொள்ளத் தவறிவிட்டார். எனவே சோனு சூட்டை கைதுசெய்து ஆஜர்படுத்தும்படி லூதியானா கோர்ட் உத்தரவிட்டது.

Tags:    

Similar News