மணிப்பூருக்கு என்னதான் ஆச்சு? கையில் துப்பாக்கிகளுடன் கால்பந்து விளையாடிய இளைஞர்கள்
- வீடியோவை ‘குக்கி மண்’ என்ற வாசகத்துடன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- மெய்தி இனத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கவலையை தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த இளைஞர்கள் கையில் துப்பாக்கியோடு கால்பந்து விளையாடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குக்கி மற்றும் மெய்தி இன குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பெரும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தற்போது ஓரளவு அமைதி திரும்பி இருக்கும் நிலையில், குக்கி இனத்தை சேர்ந்த சமூக வலைத்தள பிரபலமான இளைஞர், இரண்டு துப்பாக்கிகளுடன் மைதானத்தில் கால்பந்து விளையாடும் வீடியோவை 'குக்கி மண்' என்ற வாசகத்துடன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மெய்தி இனத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கவலையை தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் வன்முறை தொடங்கிய 2023 ஆம் ஆண்டில் இருந்து இரு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் துப்பாக்கிகளுடன் வாலிபர்கள் திறந்த வெளியில் சுற்றித் திரிவதை அடிக்கடி காண முடிகிறது. இதுதொடர்பாக நூற்றுக்கணக்கான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.