VIDEO: மகா கும்பமேளாவில் திடீர் தீ விபத்து.. கூடாரம் பற்றி எரிந்ததால் பரபரப்பு
- வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
- தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கான முகாம்கள், உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கும்பமேளா நடைபெறும் பகுதியில் பழைய ஜிடி சாலையில் உள்ள துளசி சௌராஹா அருகே உள்ள ஒரு முகாமில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
உடனே அங்கு விரைத்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சில வாரங்களுக்கு முன்பும் இப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டிருந்தது.
முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.