ஹெலிகாப்டரில் நிலை தடுமாறி விழுந்த மம்தா பானர்ஜி
- பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.
- உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர்.
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் கீழே விழுந்ததில் அவருக்கு நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. 69 வயதான அவர், கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தது வந்தார். பின்னர் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று பிரசாரத்தில் ஈடுப்பட்டார். பிரசாரம் முடிந்து துர்காபூர் பகுதியில் ஹெலிகாப்டரில் ஏறும்போது நகரக்கூடிய படிக்கட்டுகளில் மம்தா நடந்து சென்ற போது நிலை தடுமாறி கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
நிலை தடுமாறி தவறி விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். பின்னர் மம்தா தனது பயணத்தை தொடர்ந்தார்.
அசன்சோலுக்குச் செல்வதற்காக துர்காபூரில் இருந்து சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.