இந்தியா
சக வீரர்களை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட சி.ஆர்.பி.எஃப். வீரர் - மணிப்பூரில் அதிர்ச்சி
- துப்பாக்கிச்சூட்டில் 8 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் காயமடைந்தனர்.
- சி.ஆர்.பி.எஃப். வீரர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
மணிப்பூரின் லாம்சாங் மாவட்டத்தில் உள்ள முகாமில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் ஒருவர் சக ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 சி.ஆர்.எஃப். வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 8 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் காயமடைந்தனர். பின்னர் அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சி.ஆர்.எஃப். வீரர்கள் இம்பாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை மற்றும் சி.ஆர்.எஃப். அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.