இந்தியா
'ரீல்ஸ்' வீடியோவால் விமர்சனத்திற்குள்ளான பெண்- வீடியோ வைரல்
- பெண் போனை கீழே வைத்து விட்டு ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்.
- வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அந்த பெண்ணை விமர்சித்து பதிவிட்டனர்.
இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் ரீல்ஸ் மோகத்தில் இருப்பதால் அவர்களின் சில செயல்கள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி விடுகிறது. அது போன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
கர்காலேஷ் என்ற பயனர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு பெண் போனை கீழே வைத்து விட்டு ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவரது மகள் அங்கிருந்து வேகமாக சாலையை நோக்கி செல்கிறார். இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன.
இதை அங்கு நின்ற குழந்தையின் சகோதரன் பார்த்து, ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த தனது தாயாரிடம் கூறுகிறான். உடனே அந்த பெண் வேகமாக சென்று தனது மகளை காப்பாற்றும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அந்த பெண்ணை விமர்சித்து பதிவிட்டனர்.