Video: உங்க ஸ்கூட்டர் எரியுது, இப்போ காரும் எரியும் போல.. ஓலா டிரைவரால் நொந்து போன பயணி
- உங்கள் ஓட்டுநர் எங்கள் உயிரைப் பணயம் வைத்து ஓட்டும் போது ஆம்லெட் எப்படி சமைக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறார்.
- கேப் ஓட்டுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
ஓலா கேப் வாடிக்கையாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
மும்பையை சேர்ந்த வாகன ஓட்டி ஒருவர் பிஸியான சாலையில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு ஆம்லெட் செய்யும் செய்முறை வீடியோக்களை பார்ப்பதைக் காட்டுகிறது.
இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வாடிக்கையாளர், ஓட்டுநரின் நடத்தைக்காக ஓலாவை கடுமையாக சாடி உள்ளார்.
டார்க் நைட் என்ற எக்ஸ் தள பயனாளர் இந்த வீடியோவை வெளியிட்டு அதில், அன்புள்ள ஓலா, உங்கள் ஓட்டுநர் எங்கள் உயிரைப் பணயம் வைத்து ஓட்டும் போது ஆம்லெட் எப்படி சமைக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறார். உங்கள் ஸ்கூட்டர்கள் ஏற்கனவே தீப்பிடித்து எரிந்துள்ளன. இதுவும் தீப்பிடித்து எரிந்து சாம்பலாக மாறுவதற்கு முன்பு நீங்கள் சரியான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
கேப் டிரைவரின் நடத்தையை கடுமையாக சாடிய அவர், தற்போதைய விவகாரத்தில் நிறுவனம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
வைரலான வீடியோ தொடர்பாக மும்பை காவல்துறை அவரது எக்ஸ் தள பதிவிற்கு பதிலளித்தது.
கேப் ஓட்டுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. இருப்பினும், பரபரப்பான சாலைகளில் வாகனம் ஓட்டும்போது கவனத்தை சிதறடிக்கும் ஒரு முக்கிய பிரச்சனையை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
வாகன ஓட்டுநரின் கவனக்குறைவானது, காரில் பயணிப்போர் மற்றும் சாலையில் செல்லும் குடிமக்களின் உயிர்களை இழக்கும் பெரும் சோகத்தில் முடிவடையும் என்று தெரிவித்துள்ளது.